கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் அதிகரித்த இறப்பு விகிதம்!

22
22

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்களின் இறப்பு விகிதம் 1.76 சதவீதமாக அதிகரித்துள்ளது. அத்தோடு கடந்த 24 மணி நேரத்தில் 11 இலட்சத்து 72 ஆயிரத்து 179 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவை பொறுத்தவரையில் 10 இலட்சம் பேருக்கு 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும். அதே நேரத்தில் உலக அளவில் 10 இலட்சம் பேருக்கு 110 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.