மோசமான நிலையிலும் கூட கல்வி நிலை தொடரும்; ஈரானிய ஜனாதிபதி

625.500.560.350.160.300.053.800.900.160.90 7
625.500.560.350.160.300.053.800.900.160.90 7

ஈரானில் ஏழு மாதங்கள் மூடப்பட்ட பாடசாலைகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மோசமான சூழ்நிலையில் கூட நம் நாட்டில் கல்வி மூடப்படாது என்றும் 15 மில்லியன் மாணவர்களின் கல்வி சுகாதார முறையைப் போலவே முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார் .

மேலும், பாடசாலைகளில் சுகாதார நடவடிக்கைகளை இராணுவப் படையினரின் நிலைக்கு அமுல்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்துயுள்ளதாகவும் மில்லியன் கணக்கான மாணவர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் எனவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதைத் தடுக்குமாறும் மருத்துவ சபைக் குழுவின் உறுப்பினர் அப்பாஸ் அகாசாதே தெரிவித்தார் .

ஈரான் இதுவரை இணைய தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தொலைதூரக் கல்வியைப் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .