சீன தேசிய உயிரியல் குழு வெளியிட்டுள்ள செய்தி!

202005211055129814 Coronavirus evolving and changing in China as experts SECVPF
202005211055129814 Coronavirus evolving and changing in China as experts SECVPF

சீனாவினால் ஆய்வு செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனைக்காக பல நாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தப்படவுள்ளனர்.

சீன தேசிய உயிரியல் குழு இதனை தெரிவித்துள்ளது.

பஹ்ரேன், ஐக்கிய அரபு ராச்சியம், மொரோகோ, பெரு, ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளில் ஏற்கனவே அந்த பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் சீனாவின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

ரஷ்யாவினால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சிறந்த பெருபேருகளை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.