400 தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயற்சி!

army security forces militants jammu kashmir
army security forces militants jammu kashmir

லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவுவதை பயன்படுத்தி சுமார் 400 தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

400 தீவிரவாதிகளும் தற்போது இரு நாட்டு கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே உள்ள தீவிரவாத முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பிரிவு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு ஏதுவாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.