நமது நாட்டின் மீது உலகம் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது-மோடி

wallpapersden.com narendra modi prime minister 1920x1280 696x464 1
wallpapersden.com narendra modi prime minister 1920x1280 696x464 1

நமது நாட்டின் மீது உலகம் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரியின் இரண்டு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி புத்தகங்களை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியா தனது பங்களிப்பை வலுப்படுத்தி வருகிறது.

இந்திய பொருட்கள் மட்டுமல்லாது இந்திய குரலும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.