ஜப்பானின் இடைக்கால பிரதமர் தெரிவு !

Dr Hirato Izumi
Dr Hirato Izumi

ஜப்பானின் கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக, யொஷிஹிடே சுகா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய பிரதமர் பதவி மற்றும் கட்சியின் தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து ஷின்ஸோ அபே அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை அடுத்து அண்மையில் விலகியிருந்தார்.

இதனையடுத்து புதிய கட்சித்தலைவரை தெரிவு செய்வதற்காக, ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் யொஷிஹிடே சுகா வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில்,நாளை மறுதினம் ஜப்பானிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்படுவார் என கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் லிபரல் ஜனநாயக கட்சிக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது.

இந்நிலையில், ஜப்பானில் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தற்போது புதிய பிரதமாராகத் தெரிவுசெய்யப்படும் யொஷிஹிடே சுகா தேர்தல் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.