சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

eps
eps

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டிருந்தான்.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுஜித்தின் வீட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் இன்று நேரில் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.