சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு உதவும் ரோபோ!

gallerye 065547227 2523290
gallerye 065547227 2523290

கொரோனா தொற்று பரிசோதனைக்கு உதவும் ரோபோ சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் டியூக்-என்.யூ.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவ விஞ்ஞானிகள் இணைந்து ஸ்வாப்போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோ மனிதர்களின் மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை வெறும் 20 செக்கன்களில் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளின் ஒரு படிமுறையாக மனிதர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் உள்புறம் படிந்திருக்கும் நீர்மப் பொருளின் மாதிரி பரிசோதிக்கப்படுகிறது.

இந்த ரோபோ தானியங்கி முறையில் செயற்பட்டு மனிதர்களிடம் இருந்து மாதிரிகளைச் சேகரிக்கிறது.

கொரோனா பரிசோதனைகளின்போது மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று அபாயத்தைக் குறைக்க இந்த ரோபோவின் பயன்பாடு உதவும் என இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.