உலகளவில் ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்..!

WHO Corona 1585040208442
WHO Corona 1585040208442

கடந்த ஆண்டு இறுதியில் தோன்றி, 9 மாதங்களாக உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனாவால் கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான ஒரு வாரத்தில் உலகளவில் சுமார் 20 இலட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளமையும் முக்கிய அம்சமாகும்.

முன்னைய வாரங்களோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, எனினும் இந்த வாரத்தில் மரணங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.

மேற்படி 7 நாட்களில் மொத்தம் 36 ஆயிரத்து 764 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.