நிதிக்கு ஒப்புதல் அளிக்குமாறு இயக்குநர் குழுவிடம் உலக வங்கியின் கோரிக்கை…!

வறிய நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றை விநியோகித்தல் முதலான பணிகளுக்காக, 12 பில்லியன் டொலர் நிதிக்கு ஒப்புதல் அளிக்குமாறு இயக்குநர் குழுவிடம் உலக வங்கி கோரியுள்ளது.

111 நாடுகளில் அவசர பதிலளிப்பு பணிகளை உலக வங்கி ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில், குறித்த நிதிக்கு அனுமதியளிக்கப்பட்டால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் மாத வரையில், உலக வங்கி 45 பில்லியன் டொலர் உதவியை வழங்கியுள்ளது.