இந்திய பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்

modi
modi

எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ASIAN) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று தாய்லாந்து நோக்கி பயணமாகின்றார். நாளைய தினம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு தாய்லாந்தில் ஆரம்பமாகின்றது.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று (Nov.01) தாய்லாந்து புறப்பட்டு செல்கிறார்.

இந்த பயணத்தின்போது பாங்கொக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார். மேலும் ஸ்ரீகுருநானக் தேவின் 550வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அத்துடன் ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார்.

பின்னர் 3ம் திகதி நடைபெறும் இந்தியா- தென்கிழக்கு ஆசிய நாடுகள் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்வின்போது பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.