ஈராக் நாடாளுமன்ற தேர்தல் – அதிபர் அறிவிப்பு

irak
irak

ஈராக் நாட்டின் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றின் காரணமாக அதிருப்தியடைந்த மக்கள் பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகியே தீர வேண்டும் என அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் இதுவரை அங்கு 250 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய போது

அரசியல் சாசன நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கின்ற வகையில், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு மாற்று ஏற்பாடு செய்தால், பதவி விலகுவதற்கும், ராஜினாமா கடிதம் அளிப்பதற்கும் தயார் என பிரதமர் கூறி விட்டார்.

நான் தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தேர்தல் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.