இந்தியாவின் மூத்த அரசியல்வாதி ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் கூட்டணியின் பங்காளரும்; மூத்த இந்திய அரசியல்வாதியுமான ராம் விலாஸ் பாஸ்வான் தனது 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவர் பல வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (08) உயிரிழந்துள்ளதாக அவரது மகன் சிராக் பாவ்சன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பாஸ்வான் செப்டம்பர் 11 ஆம் திகதி புதுடில்லியில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (08) மாலை உயிரிழந்தார்.

இதனிடையே பீகார் மாநில அரசியலில் மறைந்த ஜெகஜீவன்ராம் அவர்களுக்குப் பிறகு, அரசியல் களத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக ராம்விலாஸ் பாஸ்வான் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.