இத்தாலியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

vikatan 2020 03 59dabdf7 7879 45bd af31 897f50cfd4ea vikatan 2020 03 70f5291e 4de6 4c6c b799 93f6296f67af 81
vikatan 2020 03 59dabdf7 7879 45bd af31 897f50cfd4ea vikatan 2020 03 70f5291e 4de6 4c6c b799 93f6296f67af 81

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கு பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீதிகள், பூங்காக்கள் போன்ற திறந்தவெளிகளிலும் சொந்த வீடுகளைத் தவிர அனைத்து மூடப்பட்ட இடங்களிலும் பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருந்ததால் இத்தாலியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அத்தகைய பொது முடக்கங்களைத் தவிர்ப்பதற்காகவே முகக்கவசத்தைக் கட்டாயமாக்கியுள்ளதாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே விளக்கமளித்துள்ளார்.

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், மூன்று இலட்சத்து 38ஆயிரத்து 398பேர் பாதிப்படைந்துள்ளனர். 36ஆயிரத்து 83பேர் உயிரிழந்துள்ளனர்.