இஸ்ரேல் – சூடான் உறவு மீண்டும் ஆரம்பம்!

இஸ்ரேல் நாட்டுடனான தொடர்பை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சூடான் நாடு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கிடையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்து வரும் திட்டம் வெற்றியீட்டியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யூத நாட்டை ஆதரிக்கும் அரபு லீக்கில் உள்ள மூன்றாவது நாடாக சூடான் இடம்பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்றைன் நாடுகள் இஸ்ரவேலுடனான உறவினை மீண்டும் புதிப்பித்துள்ளது.

1979ஆம் வருடத்தில் எகிப்து 1994ஆம் ஆண்டில் ஜோர்தான் நாடுகளும் இஸ்ரவேலுடன் சமாதானத்தில் ஈடுபட்டு வந்தது.

26 வருடங்களுக்கு பின்னர் அந்நாட்டை ஆதரித்த முதலாவது நாடுகளாகிய ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்றைன் நாடுகள் அரபு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.