அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் முகத்தில் காறி உமிழ்ந்த பெண்!

35296216 0 image a 67 1604593401319
35296216 0 image a 67 1604593401319

அமெரிக்காவில் தேர்தலையடுத்து இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவர் முகத்தில் காரி உமிழ்ந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தாம் வெற்றி பெற்று விட்டதாகவும் தெரிவித்து மூன்று முக்கிய மாநிலங்களின் வாக்கெண்ணும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் மான்ஹேட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களில் 24 வயது பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாக பேசியதுடன், அவரின் முகத்தில் காரி உமிழ்ந்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை தரையில் தள்ளி கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த பெண் காவல்துறையினரை தகாத வார்தைகளால் பேசியதும் அவரின் முகத்தில் காரி உமிழ்வதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.