சர்வதேச நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்த விரும்புவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தெரிவிப்பு!

115268317 mediaitem115268498
115268317 mediaitem115268498

சர்வதேச நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்த விரும்புவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நேற்றைய தினம் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக தான் தெரிவித்துள்ளதாகவும், ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் சுமூகமான உறவைப் பேணாத நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் ஜோ பைடனின் முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.