சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்தது!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்துள்ளதுஉலக நாடுகளில் இன்றைய நாளின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

.இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்து 2 ஆயிரத்து 161 ஆக உயர்வடைந்துள்ளதுஇன்றைய நாளில் மெக்கிக்கோவிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, மெக்ஸிகோவில் கொரோனா தொற்றினால் இன்றைய தினத்தில் மாத்திரம் 626 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ரஸ்யாவில் 411 பேரும், ஈரானில் 461 பேரும், போலந்தில் 419 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 413 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 32 இலட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.