உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202009171449596360 You are more likely to win the lottery than escape Covid19 SECVPF
202009171449596360 You are more likely to win the lottery than escape Covid19 SECVPF

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஐரோப்பா, சுவிற்சர்லாந்து மற்றும் ஜெனீவா நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்திலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இதுவரை உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுமார் 65 ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கிர்கோவ் தெரிவித்துள்ளார்.

எனினும் இது ஒரு கொத்தணியா என்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.