ஜிப்ஸி மூலம் சினிமாவுக்கு வரும் பாப் பாடகி

i3 2
i3 2

பிரபலமான பாப் பாடகி சுசீலா ராமன். தஞ்சாவூரைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் 1960களில் லண்டனில் தங்கினர் .

அங்கு கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் கற்ற சுசீலா ராமன், இரண்டையும் கலந்து இசை ஆல்பங்கள் வெளியிட்டு பிரபலமானார்.

இவர் வெளியிட்ட சால்ட் ரெய்ன், லவ் டிராப் ஆல்பங்கள் உலக புகழ்பெற்றவை. இந்தியாவுக்கு வந்து கர்நாடக இசை பற்றி நிறைய ஆய்வு செய்தார்.

இசை ஆய்வுக்காக உலகம் முழுக்க ஜிப்ஸியாக திரிந்தவர். உலக புகழ்பெற்ற பிபிசி மியூசிக் விருதையும் பெற்றிருக்கிறார்.

அதனால் இவரை ஜிப்ஸி படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன். ஜிப்ஸியில் சுசீலா ராமன் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு சுசீலா ராமனாகவே நடித்தும் இருக்கிறார்.