ராதாரவியின் பேச்சால் கார்த்திக் – பா.ஜ.வில் இணைய வாய்ப்பு

2 fd
2 fd

சினிமாவில் பெரிதாக வாய்ப்பில்லாத நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளில் இணைந்து கொள்வர். பாஜகவில் ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் என பலர் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் பாஜக நடத்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, பா.ஜ.வில் நிறைய நடிகர்கள் இணைய தயாராக இருக்கிறார்கள். இதுகுறித்து நடிகர் கார்த்திக்கிடம் பேசி இருக்கிறேன் என்றார்.

ராதாரவியின் இந்த பேச்சால் கார்த்திக், பா.ஜ.வில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 80-90களில் முன்னணி நடிகராக திகழ்ந்த கார்த்திக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்தார். பின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.