அரச அதிகாரிகளுக்கு சம்பளத்தில் ஆப்பு வைத்த ஜனாதிபதி!

7d
7d

அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள்,மற்றும் இயக்குனர்களின் மாதாந்த சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

அந்த வகையில் தலைவர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் ,இயக்குனர்கள் மாதம் ஒன்றுக்கு இருப்பது ஐயாயிரம் ரூபாவுக்கு மேற்படாத தொகைகளையுமே பெற்றுக்கொள்ளலாம் என ஜனாதிபதியின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகனங்களின் பாவனை ,எரிபொருளுக்கான உதவித்தொகை என்பன பற்றியும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .

இதனை விட அரச அலுவலகங்களில் ஊழல்,ஒழுங்கீனங்கள் மற்றும் வீண் செலவுகள் தொடர்பாக எவ்வித சகிப்பு தன்மையையும் கைக்கொள்ள வேண்டாம் என இச் சுற்றறிக்கை அறிவுத்தியுள்ளது .

இந்த தகவல் பைனான்சியல் ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.