அமெரிக்கா இரட்டைவேடம்- பொம்பியோவுக்கு சீனா உடனடியாகவே பதிலடி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 24 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 24 1

இலங்கையுடனான இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களைப் போடுகின்றது எனக் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையை சீனா வேட்டையாடுகின்றது என்று இன்று கொழும்பில் வைத்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனத் தூதரகம் டுவிட்டரில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தனது 2 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்
கொண்டு கொழும்பில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்டுள்ளார்.

முன்னதாக கொழும்பில் இன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ, சீனா ஒரு வேட்டையாடும் நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுகின்றது என்றும் கூறினார்.

அமெரிக்கா ஒரு நண்பராகவும் பங்காளியாகவும் இருந்து வருவதாகவும், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இலங்கையுடனான கூட்டணியை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள ருவிட்டில், “இலங்கை நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருக்கின்றோம். உங்கள் ஏலியன் Vs பிரிடேட்டர் (AlienVsPredator) விளையாட்டு அழைப்பில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா எப்போதுமே ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.