கம்மன்பிலவுக்கு அமைச்சுப் பதவியில்லை!!

92 1
92 1

புதிய அமைச்சரவை உருவாக்கத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் முகங்கொடுத்த சிரமம் தொடர்பில் சிந்தித்து தான் அமைச்சுப் பதவியை ஏற்கவில்லை என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 


புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை தான் ஏற்காமல் இருக்க எடுத்த தீர்மானம் ஊடாக புதிய அமைச்சரவை உருவாக்கத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் முகங்கொடுத்த அழுத்தம் ஓரளவு குறைந்திருக்கக்கூடும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல், அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று யோசனையொன்றை நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றால், எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 01 ஆம் திகதிக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


அதன்படி, தற்போதைய இடைகால அரசாங்கம் 100 நாட்களுக்கு மாத்திரமே செயற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.