வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!

IMG 20210201 WA0037
IMG 20210201 WA0037

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான தற்போதைய காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், சேவை அடிப்படையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

ஆகையினால் எமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக நாம் தொடர்ச்சியான போராட்டங்களை நாம்முன்னெடுத்து வந்திருந்தோம்.

ஆயினும் எங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்காத நிலையில் மீண்டும் நாம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆகவே வடக்கில் நீண்ட காலமாக தொண்டராசிரியராக இருக்கின்ற எங்களுக்கான நிரந்தர நியமனத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும் என்று கோரி மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று மீண்டும் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.

இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் நாம் கையளித்து இருக்கின்றோம்.

ஆகையினால் எமது கோரிக்கைகளுக்கமைய நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் உரிய பதில் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் எமக்கான நியமனம் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காத இடத்தில் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கிறோம்.

ஆகவே நமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாம் இந்த இடத்திலே தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். எனவே நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போராடி வருகின்ற எமக்கான தீர்வைப் பெற்றுத்தரசம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம் என போராட்டத்தில் கலந்து ​கொண்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.