முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்!

Ravi Karunanayake
Ravi Karunanayake

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்றின் விசேட நிரந்தர நீதாயம் உத்தரவிட்டுள்ளது.

2016 மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2016 மார்ச் மாதம் 29 அல்லது 31 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட தினம் ஒன்றில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில், மூவரடங்கிய நீதாய நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரால், குறித்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பிரதான பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோரை நீதிமன்ற உத்தரவிற்கமைய நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் நீதிமன்றத்திடம் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.