உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் தலைவர் யார் ?அந்த திரைப்படத்தை இயக்கியது யார்?-நா.உ ஹெட்டர் அப்புஹாமி!

IMG 1635
IMG 1635

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலுக்கு பணம் வழங்கியவர்கள் யார்? இதன் தலைவர் யார்? இந்த திரைப்படத்தை முழுவதுமாக யார் இயக்கியது இது எங்கிருந்து உருவானது. அவ்வாறு உருவான பயங்கரவாதிகளுக்கான வசதிகளைக் கொடுத்தது யார்? ஆணையிட்டது யார்? பயங்கரவாதிகளை தமது பிரயோசனத்திற்கு எடுத்துக் கொண்டார்களா என்ற விடயத்திற்கு பதிலை தான் நாம் கேட்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெட்டர் அப்புஹாமி இன்று செவ்வாய்க்கிழமை (20) விஜயம் மேற்கொண்டு அங்கு உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் ஹெட்டர் அப்புஹாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விசேடமாக ஜக்கிய மக்கள் சக்தி என்றவகையில் சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவும் தற்போது தேவாலயத்தின் மேலதிக விடையங்களை எவ்வாறு செயற்படுத்துவது எதிர்காலத்தில் எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றார்கள் தொடர்பாக பார்வையிட நானும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனாவும் இங்கு வந்துள்ளோம்.

உயிர்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நாளையுடன் பூர்தியடையவுள்ளது இருந்த போதும் நாளையோ அல்லது அதற்கு அடுத்த தினமோ நாடு பூராகவும் மக்கள் வெளிவந்து இதற்கான நியாயத்தை கேக்கும் சந்தர்பத்திலும் தேவாலய ஆராதனை இடம்பெறும் சந்தர்பத்திலும் எமது பங்களிப்பு என்ன என்பதை பார்ப்பதற்கு வந்துள்ளோம்.

இந்த தேவலாயத்திற்கு வந்தபோது ஏனைய தேவாலயத்தை விட சிறுவர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளதுடன் இவர்களுடன் மொத்தமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் அதிகமானோர் படுகாயமடைந்து அங்கவீனர்களாகவுள்ளனர் என்பது மிகவும் கவலையான சம்பவம்.

இது தொடர்பாக நாமோ அரசோ என்ன செய்துள்ளோம். இந்த தேவாலயம் குண்டுதாக்குதலுக்கு பின் நடந்த கட்டிட நிர்மானப்பணி ஏன் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது குண்டுதாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடம் முடிவடைந்துள்ளது அரசாங்கம் இன்னும் ஏன் செயற்படவில்லை என்பது கவலையாகவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில் இந்த தேவாலய நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தோம். அந்த அரசு முடிவுறும் போது இதுவும் முடிவுற்று இடைநடுவில் விடப்பட்டுள்ளது. இதற்கு பிறகு எந்தவிதமான அபிவிருத்தியும் இடம்பெறவில்லை அரசு இதனை ஏன் செய்யவில்லை?

இந்த குண்டு வெடித்தது இனரீதியான பிரச்சனையே இங்கு குழந்தைகளிடமோ தேவாலயத்தில் இருக்கும் பிரச்சனைகளோ அல்ல. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசுக்கு கடமையிருக்கின்றது நாளைய தினமாகும் வேளை அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றாக பயணிப்போம் என கட்டியொழுப்பப்படவில்லை அது பாரிய பிரச்சனையாகவுள்ளது.

ஒருபகுதியினருக்கு குண்டுவெடிப்பு இடம்பெற்றதன் பின் அவர்களை மீண்டும் அதேநிலமைகே தள்ளிவிடுகின்ற நிலையுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்போம். இந்த குண்டு வெடிப்பிற்கு பணம் வழங்கியவர்கள் யார்? இதன் தலைவர் யார்? யார் முழுவதுமாக அந்த திரைப்படத்தை இயக்கியது என நாம் கேட்கின்றவேளை எமக்கு இந்த இடத்திற்கு வந்ததன் பின் வேறு ஒன்று கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் நடந்ததன் பின் அரசு என்ன செய்தது எனக்கேட்க முடியும். இதன் வேலைகளும் முடிவடைந்து விட்டது என அரசு இதனைச் செய்தவர்கள் யார் இதன் பிற்புலம் என பல்வேறுபட்ட விடயங்களையும் ஆராயும் இவ்வேளை அம் மக்களுக்கு மத அனுஷ்டானங்களை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாதது ஏன் என்பதே எமது பிரச்சனையாகவுள்ளது.

எனவே நல்லிணக்கத்தைப்பற்றி பேசிப் பிரயோசனமில்லை சிலசில இடங்களில் புதுமையாக நிர்மானித்தும் வேலையில்லை அனைத்து மத குருமார்களுக்கும் இருப்பது போன்று நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொறுப்புள்ளது நாட்டினுள் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமானால் தத்தமது மதங்களிலுள்ள நம்பிக்கையினை அரசு என்ற வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்காகும்.

அரசு போடுகின்ற கேம் தான் இது அரசு கூறுகிறது அதனை அப்போதைய அரசாங்கம் அறிந்திருந்தது ஆனால் அவர்களது குறைபாடுகளினால் தான் இது இடம்பெற்றதாக ஆனால் நான் கூறுகின்றேன் இல்லை. அந்த குண்டு வெடித்த விடயத்தினை எடுத்து நோக்கும்போது தெரிகிறது இந்தக் குண்டு எங்காவது வெடிக்கத்தான் போகின்றது.
ஆனால் இது இடம்பெற்ற இடம், காலம், சம்பவங்களை நோக்கிப் பார்க்கும் போது தெரிகிறது அரசு சரியாக இவ்விடங்களில் செயற்படாத காரணத்தினால்தான் இவ் விடங்களில் இது நடந்தது. அவ்வாறு இல்லையென்றால் இது வேறு இடத்தில் இடம்பெற்றிருக்கும். நாங்கள் இதனை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும்.

ஒன்று இந்த விடயம் எங்கிருந்து உருவானது அவ்வாறு உருவான பயங்கரவாதிகளுக்கான வசதிகளைக் கொடுத்தது யார்? அவ்வாறான வசதிகளை வழங்கி அவர்களுக்கு ஆணையிட்டது யார்? பயங்கரவாதிகளை தமது பிரயோசனத்திற்கு எடுத்துக் கொண்டார்களா? என்ற விடயத்திற்கு பதில் தான் நாம் கேட்பது. ஆனால் மற்றப்பக்கம் நோக்கினால் அந்த குண்டு வெடித்த இடம் நடந்த காலம் போன்றவற்றைப் பார்த்தால் இருந்த அரசின் குறைபாடுகளினால் தான் இது இடம் பெற்றதா அவ்வாறாயின் இவை இரண்டு விதம் எனவே இவை சரியான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என நாம் நம்புகின்றோன் என்றார்.