2022 செப்டெம்பரில் பிரதமராகின்றார் நாமல்! – பிரபல ஜோதிடர் கணிப்பு

download 12
download 12

அமைச்சர் நாமல் ராஜபக்‌ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி கணித்துக் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்று தானே முதலில் தெரிவித்தார் எனவும், அதன் பின்னர் ஏனைய ஜோதிடர்கள் கூறினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்‌ச 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பிறந்துள்ளார் எனவும், அவரது ஜாதகத்தின்படி இலங்கையின் ஜனாதிபதியாகும் கிரக யோகம் இருக்கின்றது எனவும் ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நாமல் பிறந்த யோகத்தில் சக்திவாய்ந்த கிரகங்கள் எதுவும் இல்லை என்றாலும், அதிஷ்டமான கிரக நிலை ஒன்று இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனியின் இந்தக் கணிப்பால் கொரோனாவுக்கு மத்தியில் தெற்கு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.