அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பசில் – ஜயந்த கெட்டகொட

download 5
download 5

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் களமிறக்குவோம் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்தார்.

பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவரே துறந்தார். இந்நிலையிலேயே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பசிலை நிச்சயம் கொண்டு வருவோம் என்ற அறைகூவலை அவர் விடுத்துள்ளார்.