நாட்டை முடக்குங்கள்; ஜனாதிபதியிடம் அரசின் பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

curfew 2
curfew 2

நாட்டைக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைந்தபட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால் கொரோனாத் தொற்று நோயாளர் தொகை அதிகரிப்பதுடன், வைத்தியசாலைகள் பராமரிப்புத் திறனை முற்றாக இழந்துவிடும் எனவும் 10 கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரர், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வைத்தியர் ஜீ. வீரசிங்க, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன மற்றும் யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.