கோதுமை மா, பால் மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

mygod
mygod

கோதுமை மா, பால் மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியாயமற்ற விலை அதிகரிப்புக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.