பாடசாலைகளை மீளத் திறப்பது நியாயமா? – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தி

மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான தீர்மானத்தை அரசு எடுத்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரஜித கொடித்துவக்கு தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளாமல், பாடசாலைகளை மீளத் திறப்பதற்குத் தீர்மானித்திருந்தால் இந்தப் பிரச்சினை மீண்டும் இருந்த இடத்துக்கே செல்லும் என்பதை நாம் நினைவூட்ட விரும்புகின்றோம்.

அதேபோன்று அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்காது அதற்குப் பதிலாக சகல விடயங்களிலும் இராணுவத்தினரை உள்ளீர்ப்பதைப் போன்று ஆசிரியர்கள் இல்லாவிட்டால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அழைத்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்தால் அது அரச நிர்வாகம் இல்லை என்றே கூற வேண்டும். என்றார்.