விலங்குகளின் அட்டகாசத்துக்கு முடிவுகட்ட வெளிநாட்டுப் பொறிமுறை பற்றி ஆராய்வு

b631dbd2 a0328976 b56ee3af mahindananda aluthgamage 850x460 acf cropped 850x460 acf cropped 1
b631dbd2 a0328976 b56ee3af mahindananda aluthgamage 850x460 acf cropped 850x460 acf cropped 1

“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் வெளிநாடுகளில் கையாளப்படும் முறைமைகள் குறித்தும் ஆராயப்படுகின்றது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார நாடாளுமன்றத்தில் இன்று, “விவசாயிகளால் பயிரிடப்படும் பயிர்ச்செய்கைகளுக்கு வனவிலங்குகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம்” என்று வலியுறுத்தினார்.

இதற்குபி பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர்,

“இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப்பொருட்களில் 45 முதல் 50 வீதமானவை வன விலங்குகளாலும், போக்குவரத்தின் போதும் அழிவடைகின்றன.

காட்டு யானைகளால்தான் பெரும் பாதிப்பு. எனவே, யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென தனி அமைச்சே உருவாக்கப்பட்டுள்ளது.

குரங்கு தொல்லைதான் பெரும் பிரச்சினை. வீடொன்றில் மிளகாய் செடி ஒன்றைக்கூட விட்டு வைப்பதில்லை. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளில் கையாளப்படும் முறைமைகள் குறித்தும் ஆராயப்படுகின்றது.

போக்குவரத்தின் போது அழிவு ஏற்படுகின்றது. எனவே, ரயில்கள் மூலம் விவசாய உற்பத்திகளைக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது” – என்றார்.