விக்னேஸ்வரன் தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும்: விமல் வீரவன்ச எம்.பி!

ea04db0e 7d8b 4f87 9327 e5f0d7ee7229
ea04db0e 7d8b 4f87 9327 e5f0d7ee7229

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்றய இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம்.

தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் பயணம் அவர்களுக்கு கிடைக்காது.

முதலமைச்சராக பதவி வகித்து வடக்கு மாகாணத்தை நாசமாக்கிய விக்னேஸ்வரன் இனவாதத்தையும் மொழிவாதத்தையும் மதவாதத்தையும் வைத்து அரசியல் நடத்தலாம் என்ற நோக்குடன் தற்போது நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவரின் இலக்குகள் எதுவும் எம்மை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேறாது” என மேலும் தெரிவித்துள்ளார்.