ஹெரோயினுடன் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவர் கைது!

eb989827 278856 550x300 crop
eb989827 278856 550x300 crop

மாத்தறை – அக்குரெஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 390 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

28 வயதுடைய விமானப்படை உறுப்பினர்களும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.