போகம்பறை சிறைச்சாலையில் பரவும் கொரோனா தொற்று – அபாயத்தை எதிர்நோக்கும் கண்டி நகரம்

001 1 1 1
001 1 1 1

போகம்பறை சிறைச்சாலையில் பரவும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத பட்சத்தில், கண்டி நகரம் முழுவதும் பாரிய அபாயத்தை எதிர்நோக்கும் என கண்டி பிராந்திய சிரேஷ்ட் காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவிக்கின்றார்.

கண்டி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

போகம்பறை சிறைச்சாலைக்கு தற்காலிகமாக 100 பேர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து வரப்படுவதாக தெரிவித்தே, இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், பழைய போம்பறை சிறைச்சாலையில் போராட்டம் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் 809 பேர் இருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த போராட்டம் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், மாற்று வழி இல்லாமையினால், தனக்கு உள்ளே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

தான் உள்ளே செல்லும் சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து, 20 நாட்கள் கடந்த 248 பேர் இருந்ததையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் கண்டி நகருக்கு தற்போது சென்று வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பேகம்பறை சிறைச்சாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை சரிவர செய்ய தவறும் பட்சத்தில், கண்டி நகருக்கே ஆபத்தான நிலைமை காணப்படுவதாக கண்டி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவிக்கின்றார்.