அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு

download
download

அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்றையதினம் பிரதமர் மகிந்தராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகப்பற்றற்ற சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்ததாகவும், அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி விரைவில் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயித்து, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.