தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் கிழக்கு – வியாழேந்திரனுக்கும் வேட்டு

Viyalenthiran
Viyalenthiran

கோட்டபாய வந்தால் கிழக்கு தமிழர்களின் வாழ்வில் விடிவு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தவர்களின் முகத்தில் கரிபூசப்பட்டுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரனுக்கு இடமளிக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசிபெற்ற நல்லாட்சி அரசாங்கத்திலும் கிழக்கில் தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அதைக் காரணம் காட்டி கிழக்கில் மக்கள் செல்வாக்குள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட்டோர் கோட்டபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்படுவார் என தேர்தல் காலத்தில் அவரது ஆதரவாளர்கள் பிரச்சார் செய்தனர் ஆயினும் கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக திஸ்ஸ விதாரண அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.