மும்மொழிப் பாடசாலைகள்- கல்வி அமைச்சர்

5 gf
5 gf

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமானதும், நியாயமானதும், தரமானதுமான கல்வி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கும், எதிர்வரும் இருவருட காலப்பகுதிக்குள் இத்தகைய 20 பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.