சமூக வலைத்தளமூடாக நிவாரண உதவி மோசடிகள் !!

1 help
1 help

நாட்டில் ஏற்பட்டுள்ள மழை ,வெள்ள அனர்த்தம் தொடர்பில் பலவகையான உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் அரசு ,அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன இந்த உதவிகளை வழங்குவதில் முன்னின்று உழைக்கின்றன என்றே கூறவேண்டியுள்ளது .

சமூக வலைத்தளங்கள் மூலமும் ஏனைய தொடர்பாடல்கள் மூலமும் பெறப்படும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களை சென்று சேருவதாக இல்லை என்று எமது செய்திச் சேவைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

இதுதொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது .
சமூக வலைத்தளங்களூடாக பாதிக்கப்படடவர்களுக்கான உதவிக்காக சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் நிதிகள் தொடர்பில் பலர் மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது .

தனிநபர்கள், வெளிநாட்டில் வசிக்கின்ற புலம்பெயர் தமிழர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் நிவாரணபொருட்களை வழங்குமாறும் நிதி வழங்குமாறும் கோருவது முற்றிலும் தவறான ஒரு செயற்பாடாகவே அவதானிக்கப்படுகின்றது.
எனவே பாதிக்கப்படடவர்களுக்கான உதவிகளை வழங்குபவர்கள் வழங்க விரும்புபவர்கள் சமூக வலைத்தள நபர்களிடம் விழிப்பாக இருக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம் .