கடந்த அரசாங்க பிரேரணை ஏகமனதாக ஏற்பு

1 hh 1 1
1 hh 1 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்புப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடத்திற்கு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.டி.ஆர்.எஸ்.அபேரட்னவை நியமிக்குமாறு  ஜனாதிபதி முன்வைத்துள்ள பிரேரணையையே அரசியலமைப்புப் பேரவை நேற்று ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் நடைபெற்றது. இதில் 9 பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாத நிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு ​பேரவை நேற்று கூடியது. இதில் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளே அழைக்கப்பட்டிருந்தார்கள். எதிர்வரும் வாரங்களில் இதிலுள்ள அங்கத்தவர்களில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.