முன்னாள் அமைச்சர் வஜிர ரணிலுக்கு ஆதரவாக கருத்து!

3 ewA
3 ewA

எமது கட்சியிலுள்ள சிலருடை முட்டாள்தனமான எண்ணங்களின் காரணமாக நாம் அரசாங்கத்தை இழந்தோம் எனவும், இல்லாவிட்டால் இப்போதும் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கமே இருந்திருக்கும் எனவும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி தொகுதி கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எம்மில் சிலர் கூக்குரல் இடாதிருந்தால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி இன்னும் ரணில் விக்ரமசிங்கதான் பிரதமராக இருந்திருப்பார். மார்ச்சில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை எமது அரசாங்கம்தான் இருந்திருக்கும். எமது அரசியல் தரப்பிலுள்ள சிலர் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு கோசம் எழுப்பினர்.

கடந்த 52 சதிகார நடவடிக்கையின் போது கொடுக்காதிருந்த அலரி மாளிகையை எமது கட்சியினருடைய முட்டாள்தனத்தின் காரணமாக ஆயுள் முழுவதற்கும் கொடுக்க வேண்டிவந்தது.

இதுபோன்ற எமது கட்சியினர் செய்த முட்டாள்தனங்களை நான் இங்கு அடக்கியே வாசிக்கின்றேன் எனவும் முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். என்னுடன் மோதிக் கொண்டு எனது வாயை கிளப்பிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கட்சி உறுப்பினர்களை எச்சரித்துள்ளார்.

நாம் சிந்தனையுடன் செயற்பட வேண்டும். சித்த சுயாதீனமற்றவர்களாக செயற்பட்ட முடியாது.

எமது கட்சியிலுள்ள சிலர் தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக சஜித் பிரேமதாசவையும், வேறு சிலர் ரணில் விக்ரமசிங்கவையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஸாக்களை அரசியலில் வெல்வதற்கு நான் அறிந்த வரையில் இந்த மண்ணில் ஒரு தலைவர் இருப்பாராக இருந்தால், அது ரணில் விக்ரமசிங்க மட்டுமே ஆகும். வேறு எவருக்கும் அதனைச் செய்ய முடியாது. அவர் இருப்பது இன்னுமொருவர் தலைமைத்துவத்துக்கு வருவதற்கு தடையல்ல. அவர் கட்சியில் இருப்பதனால், இன்னுமொருவருக்கு தடையல்ல.

ரணில் விக்ரமசிங்க என்பவர் ரயில் பாதையில் அகப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் போன்றவர். அது ரயிலின் சில்லுக்கு பல தடவைகள் அகப்பட்டு சமைந்துள்ளது. இவ்வாறு பதமாகியுள்ள ஒரு நாணயத்தை வைத்திருப்பதுதான் சிறந்ததே அன்றி, இன்னுமொரு நாணயத்தை ரணிலின் சில்லுக்கு வைத்து பதமாக்க முயற்சிப்பது புத்திசாலித்தனமான செயலல்ல எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.