அலுவலகத்தில் வசதியில்லை என கூறியது குற்றமா ?

90 gh
90 gh

கெஹெலிய ரம்புக்வெல்ல தனக்கு வழங்கப்பட்ட அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் குறை கூறி வந்ததை கேள்வியுற்றுள்ள பிரசன்ன ரணதுங்க, அவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை கைவிட்டு, கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்கப்பட்ட அலுவலகத்திற்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

தனது அமைச்சுக்கான அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லை என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஒவ்வொரு இடங்களில் கூறி வந்த காரணத்தினால், அந்த அமைச்சின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்கப்பட்ட அலுவலகத்திற்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரியவருகிறது.

பிரசன்ன ரணதுங்க நேற்று அந்த அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு உலக வர்ததக மையத்தின் 27ஆவது மாடியில் பிரசன்ன ரணதுங்கவுக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு 25ஆவது மாடியில் அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.