நாடாளுமன்றத் தேர்தல் கூட்டமைப்பின் போட்டியாளர்கள் பெயர்விபரம் வெளியீடு

1 ges
1 ges

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2020 இல் இடம்பெறவுள்ள நிலையில்,இலங்கையின் வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில் வன்னித் தேர்தல் மாவட்டத்துக்கான ஆசனப் பங்கீடும் அதன் வேடப்பளர்கள் தொடர்பிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது .

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 4ஆசனங்களும் ,தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ). – 3 ஆசனங்களும் ,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) – 2 ஆசனங்களும் என மொத்தம் 9 ஆசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் பட்டியலில்.

செல்வம் அடைக்கலநாதன் – தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), இ.சாள்ஸ் நிர்மலானதான் (இலங்கை தமிழரசுக் கட்சி) ஆகியோர் மன்னார் மாவட்டத்துக்கும் ,
க.தா.லிங்கநாதன் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளொட்) வவுனியா மாவட்டத்துக்கும்

கந்தையா சிவனேசன்- பவான் ,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், மயூரன் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அல்லது வேறு ஒருவர்
பத்மநாதன் சத்தியலிங்கம் (இலங்கை தமிழரசுக் கட்சி) ஆகியோர் வவுனியா மாவட்டம் .

சாந்தி சிறிஸ்கந்தராஜா (இலங்கை தமிழரசுக் கட்சி)
சி.சிவமோகன் (இலங்கை தமிழரசுக் கட்சி) விநோகாதரலிங்கம் , தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் தெரிவாகி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார் .

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 வேட்பாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் ,மன்னார் மாவட்டத்தில் 2 வேட்பாளர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர் .

தமிழர் தலைமையை பொறுப்பேற்பது யார் என்பது தொடர்பில் கட்சிகளுக்கிடையிலும் உறுப்பினர்களுக்கிடையிலும் குழப்ப நிலைகள் நிலவி வருகின்றன இந்த சந்தர்ப்பத்தில் புதிய கட்சிகள் பல உருவாக்கி உள்ளமையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது .