ஆபத்தான நாடுகளின் பட்டியலில் – இலங்கை!

5 hu
5 hu

பயணம் செய்வதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தான நாடுகள் என்ற ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு ஸ்திரமற்ற நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பின்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

மேலும், லிபியா, சோமாலியா, வெனிசுவேலா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் உள்ளன.

ஆப்பிரிக்க வலய நாடுகள் குறைந்த சுகாதார நாடுகளாகவும், சிரியா, யேமன், ஈராக், சோமாலியா, லிபியா, நைஜீரியா ஆகிய நாடுகள் மக்கள் பாதுகாப்பு குறைந்த நாடுகளாக உள்ளன.

நோர்வே, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லொவெனியா ஆகிய நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு நிறைந்த நாடுகள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.