வெளியாகியது கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

tamil national alliance
tamil national alliance

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையிலான ஆசனப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இழுபறி நிலையில் இருந்த ஆசனப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நேற்று (03-01-2020) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அவ் இணக்கப்பாட்டின்படி,

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் – இலங்கைத் தமிழரசுக் கட்சி 7, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 2, தமிழீழ விடுதலை இயக்கம் 1

வன்னித் தேர்தல் மாவட்டம் – இலங்கைத் தமிழரசுக் கட்சி 4, தமிழீழ விடுதலை இயக்கம் 3, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 2

மட்டக்களப்பு மாவட்டம் – இலங்கைத் தமிழரசுக் கட்சி 5, தமிழீழ விடுதலை இயக்கம் 2, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 1

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எந்தக் கட்சியிடமும் வேட்பாளர்கள் இல்லாததால் அனைவரும் இணைந்து வேட்பாளர்களை நிறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.