தாமே தமக்காக நீதிமன்றில் வாதாடவுள்ள தமிழ் அரசியல் கைதிகள்!

4 rr 1
4 rr 1

தமிழ் அரசியல் கைதியொருவர் தமிழ் மொழியில் தனக்குத்தானே வாதாட கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு கனகசபை தேவதாசன் (63) என்பவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள அவரது இல்லத்தில், 6 கைக்குண்டுகளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அ கைது செய்யப்பட்டிருந்தார்.

அவசரகால சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் . வழக்கின் போது அவர் தனக்குத்தானே வாதாடியிருந்தார்.

இந்த நிலையில் 2018- நவம்பர் 18ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பிற்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்த அவர், அந்த மனுவில். தனக்குத்தானே தமிழ் மொழியில் வாதாட அனுமதி கோரியிருந்தார்.

இதற்கமைய கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 13ம் திகதி அவரது முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது தனக்குத்தானே வாதாட முனைவது ஏன் எனவும். சட்டத்தரணியொருவரை நியமிக்க முடியும் தானே எனவும் நீதிமன்றம் வினவியது,

அதற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமையை அனுபவிக்க விரும்புவதாக தேவதாசன் பதிலளித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் மார்ச் 30ம் திகதி வழக்க இடம்பெறமென திகதியிட்டது. அன்றைய தினம் தமிழ். ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் பிரசன்னமாகியிருக்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இதுவரை சிங்களம். ஆங்கில மொழிகளிலேயே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.