தமிழ்த் தேசியத்தைப் பலி கேட்கும் ‘சைக்கிள்த் தேசியம்’!

cycle
cycle

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் என்றுமில்லாதவாறு தமிழர் நலன்களை மறந்து சுயநல கட்சி அரசியில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதன் உச்சகட்டம் அண்மையில் நடந்து முடிந்த எழுக தமிழில் அரங்கேறியது.

ஒரு அரசியல் கட்சியானது தனது நலனுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயார் என்பதை எழுக தமிழுக்கு முந்தைய மற்றும் பிந்தைய செயற்பாடுகள் மூலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழர்சார்பான எழுச்சி நிகழ்வை அரசாங்கமோ அல்லது அரசாங்கச் சார்போ குழுக்களோதான் குழப்பும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்கள். இம்முறை பாரம்பரியக் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அதன் முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டது. கடந்த வருட எழுக தமிழில் தங்கள் கட்சியால்தான் அதிகளவு மக்கள் வந்தார்கள் என்ற பொய்யை மெய்ப்பிப்பதற்காக எழுக தமிழ் எழுச்சி மீதும் அதை தலைமை தாங்கி நடாத்திய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்மீதும் அவதூறுகளையும் அள்ளிவீசினார்கள் கஜேந்திரகுமாரால் மூளைச் சலவை செய்யட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் மூடர் கூட்டம்.

தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்தின் பின்னர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசானது தொடர்ச்சியாக தமிழ் மக்களால் நிராகாரிக்ப்பட்டே வந்துள்ளார். 2010 ஆண்டிலிருந்து அதை மீளக் கட்டியெழுப்புவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கவசத்துடன் கஜேந்திரகுமார் வலம் வருகிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அவை அரசியல் காழ்ப்புணர்வினால் ஏற்பட்ட விமர்சனங்களாகப் பார்க்கப்பட்டன. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்யாமல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசாகவே கொண்டு செல்லும் கஜேந்திரகுமாரின் கயமைத் தனத்தை புரிந்துகொண்ட ஒரு தரப்பினர் கஜேந்திரகுமாரை விட்டு ஒதுங்கத் தொடங்கினர்.

2010 இலிருந்து தனி வழி நோக்கி கஜேந்திரகுமார் சென்றாலும் தொடர்ச்சியாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரசை மக்கள் நிராகரித்தே வந்தார்கள். 2015 ஆம் ஆணடு தொடக்கத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்த நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அக்கட்சியுடன் கொள்கைரீதியாக முரண்பட்ட சந்தர்ப்பத்தில் அவரைத் தனது கட்சிக்குள் இழுத்து தனது பாட்டானாரின் கட்சிக்கு உயீருட்டும் திட்டத்தை வகுத்தார் கஜேந்திரகுமார். ஆனால் பல கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் பேரவையாக பயணிக்க இணங்கிய விக்னேஷ்வரன் கஜேந்திரகுமாரின் கனவுக்குப் பலியாக சம்மதிக்கவில்லை. ஈபிஆர்எல்எவ், புளொட் மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்த தமிழ் மக்கள் பேரவையின் முகமாக விக்னேஸ்வரனே இருந்தார். விக்னேஸ்வரனுக்கான மக்கள் செல்வாக்கை தனது கட்சிக்கான வாக்காக மாற்ற வேண்டும் என்று எண்ணி கடந்த தேர்தலில் மக்களைக் குழப்பும் விதமாக தாங்கள்தான் தமிழ் மக்கள் பேரவை என்று காட்டுவதற்கு தமிழ்த் தேசிய பேரவை என்ற பெயரில் போட்டியிட்டனர். யாழ்ப்பாணத்தில் இது ஓரளவுக்கு வெற்றியளித்து கணிசமான ஆசனங்களையும் கட்சிக்குப் பெற்றுத் தந்தது.

முன்னாள் முதலமைச்சர் தனிக் கட்சி தொடங்கமாட்டார் தனது கட்சியுடனே இணைவார் என்று கனவு கண்ட கஜேந்திரகுமாருக்கு முதலமைச்சரின் புதுக்கட்சி அறிவிப்பு இடியாக விழுந்தது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் தோற்றாலும் பரவாயில்லை விக்கினேஷ்வரனைக் களங்கப்படுத்தி மாற்றாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசே வரவேண்டும் என்ற எண்ணப்போக்கில் கஜேந்திரகுமாரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எழுக தமிழுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் பேரவையினர் வேலை செய்ததற்கு ஈடாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று வேடமணிந்து பயணிக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினர் எழுக தமிழுக்கு எதிராக வேலை செய்தார்கள் என்றால் அது மிகையல்ல. எழுக தமிழ் அன்றே எழுக தமிழுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்ததில் இருந்து எழுக தமிழ் நடைபெறாது என்று முகநூலில் பொய்ச் செய்திபரப்பியதுவரை கடந்த முறை எள்ளெண்ணைய் பத்திரிகை செய்த செயலையும் விட அதிகமாகவே செய்தார்கள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினர். எழுக தமிழ் முடிந்த பின்பும் அதை ஒரு தோல்வி நிகழ்வாகக் காட்டுவதற்கான பொய்ப் பரப்புரையில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் கஜேந்திரகுமாரின் வளர்ப்புகள்.

இதையெல்லாம் லண்டனிலிருந்து ரசித்துப் பார்த்துக்கொண்டு தனது பாட்டனாரின் துரோகச் செயலை தொலைக்காட்சி ஒன்றில் நியாயப்படுத்திக்கொண்டிருந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இனம் வீழ்ந்தாலும் பரவாயில்லை கட்சி வாழமெண்டும் என்ற கஜேந்திரகுமாரின் மனநிலைமாறும் வரை, எழுக தமிழ் எழுச்சிக்கு எதிராக செயற்பட்ட கஜேந்திரகுமார் குழு அரசாங்கத்தின் பந்தயக் குதிரைகளாகவே பார்க்கப்படுவர்.