வாழைச்சேனையில் சேதமடைந்த வீடு புனரமைப்பதற்கு முதல்கட்ட நிதி வழங்கும் நிகழ்வு!

01 6
01 6

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மினி சூறாவளியால் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு வீடு புனரமைப்பதற்கு முதல்கட்ட நிதி வழங்கும் நிகழ்வு செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் கே.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது கடந்த யூலை மாதம் ஏற்பட்ட மினி சூறாவளியின் காரணமாக வீடுகள் சேதமடைந்த பதின்மூன்று பேருக்கு தங்களுடைய வீட்டினை புனரமைப்பதற்கு முதற்கட்ட நிதிகள் வழங்கப்பட்டது.

அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்களத்தில் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முதல்கட்டமாக பத்தாயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சத்து மூப்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் கே.சுரேஸ்குமார் தெரிவித்தார்.