மீண்டும் இனவாதத்தை தூண்டவே தேசிய கீதத்தில் பிரிவினை – மனோ கணேசன்

7 ad
7 ad

இலங்கையில் தமிழ் ,சிங்கள மக்களுக்கிடையில் பிரிவினை இடம்பெற்று 30 வருடகாலம் யுத்தம் இடம்பெற காரணமானதே தமிழ்மக்களின் உரிமைகளை சிங்கள தேசத்தவர்கள் புறக்கணித்தமைதான். அதேபோலவே தமிழில் பாடப்படவுள்ள தேசிய கீதத்தையும் புறக்கணித்து பிரிவினையை ஏற்படுத்துகின்றனர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .

இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது . இந்த நிகழ்வில் இலங்கையில் வாழும் இரண்டு இனத்தவர்களுக்கும் பொதுவாக உள்ள தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் பாடவேண்டும் என தமிழர் தரப்பினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இரண்டு மொழிகளில் பாடினால் இரண்டு இனம் இலங்கையில் இருப்பது அங்கீகரிக்கப்பட்டுவிடும் என அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று தெரிவித்திருந்தார் .


இந்தவிடயம் அரசியல் பூசி மெழுகலா ?அல்லது தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க பின்னிற்கும் செயற்பாடா ? என முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிடம் தமிழ்க்குரல் ஊடகம் வினவியது .

இதற்கு பதிலளித்த அமைச்சர் தமிழ்மக்களின் சின்ன சின்ன உரிமைகளை புறக்கணித்தமையால்தான் இலங்கையில் 30 வருடகாலம் போர் நடந்தது ,தேசியகீதத்தை தமிழிலும் இலங்கை திருநாட்டை சுட்டித்தான் பாடுகிறோம் வேறு ஒரு நாட்டை சுட்டி தமிழில் கீதம் பாடவில்லை .

எந்த மொழியில் பாடினாலும் இலங்கையை சுட்டியே பாடப்படுகிறது ,நிகழ்வுக்கு எத்தனை பிரமுகர்கள் வருகிறார்கள் அவர்கள் எந்த மொழியை அதிகமாக பேசுகிறார்கள் என்பது முக்கியமில்லை. நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும் நிகழ்வை பார்க்கப்போகிறார்கள் எனவே தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் .

இவர்களின் இந்த நிலைப்பாடு புரியாத புதிராக இருக்கிறது, சிலவிடயங்களை மூடிமறைக்கவே இப்படியான கருத்துக்களை சொல்கின்றனர் .

இது இனவாதமாக ஏற்படலாம் இனவாத செயற்பட்டுக்கு இவர்கள் வழிவகுக்கின்றனர் என எமது தமிழ்க்குரல் செய்திசேவைக்கு தெரிவித்துள்ளார் .